நா எதுக்கு டா கிறிஸ்துமஸ் கொண்டாடனும் ???
நீ வரும் பாதை....?
ஈழத்து உறவுகளின்
அண்ணன் நீ !
மாவீரன் என்றழைக்கப்பட்டாலும்-நீ
ஈழ மக்களின்
மன்னன் நீ !
மன்னனாக வழிநடத்தியது போதும்
எங்கிருக்கிறாய் நீ !
ஈழம் மலர...
கொரில்லா தாக்குதலில்
ஜந்துக்களையும்
நர மிருகங்களையும்-வெட்டி
வேட்டையாடிய
வேட்டைக்காரனே !
நீ இன்னுமா மறைவிடத்தில்...
பாடையில் போக வேண்டிய
காடைகள் எல்லாம்
மேடையில் எக்காளம் போடுதே!
எங்கிருக்கிறாய்... நீ !
ஈழம் மலர..
தலைக்கு தலையணி...
காலுக்கு காலணி...
விளையாட கோலி...
அம்மா மடியில் தூக்கம்...
கதை சொல்ல பாட்டி...
என்றிருக்கும் வயதில் தீர்மானித்தாயே
எம் தலைவா..
14 வயதில் ஈழத்தின் எதிர்காலத்தை
நிர்மாணிக்க புறப்பட்ட புலியே
எங்கிருக்கிறாய்... நீ!
ஈழம் மலர...
தமிழீழத் தாயகம் என்ற
முழக்கத்தை
புலிகளின் குரலில்
கேட்டுக் கேட்டு மகிழ்ந்தோமே !
உன் குரலில்
அம்முழக்கத்தை
இன்று மீண்டும் கேட்கமாட்டோமா?
உன் பெயரை உச்சரித்தால்-எங்கள்
உள்ளம் பூரிக்கும்- அதே
பெயரை எதிரி உச்சரித்தால்-அவன்
ரத்தம் கருத்துப்போகுமே !
எங்கிருக்கிறாய்... நீ !
ஈழம் மலர...
சத்தியத்தை நெஞ்சில் நிறுத்தி
ஈழ மக்களின் சுதந்திர மூச்சுக்கு
பேச்சை மட்டுமா அடக்கினான் !
தனது மூச்சையும் அடக்கிய
தீலிபனின் தியாகத்துக்கு
வரலாற்றில் தீர்ப்பு
எழுத வேண்டாமா?
விதியென சும்மா கிடப்பதா
சதி செய்த சண்டாளர்கள்
வரலாற்றில் வாழ்வதா?
முள்ளிவாய்க்காலின் ஊருக்கு...
வரலாற்றில் பிழையான
பக்கமே பதிந்து போனதே
எம் தலைவா?
திரித்த வரலாற்றை
திருத்தி எழுத
வந்துவிடு தலைவா...
ஈழம் மலர...
நாங்கள் குருடர்களாய்...
நீ மெளனமாய் இருந்தால்
நாங்கள் ஊமைகளாய்...
நீ பேசாமல் இருந்தால்
நாங்கள் செவிடர்களாய்...
வீடில்லாமல்
வீதியில்லாமல்
நாதியில்லாமல்
விதியேயென
கதியாய் கிடக்க
இன்னும் எத்தனை நாள்
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க தலைவா?
ஈழம் மலர...
உங்கள் ஒட்டு !!!
அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். இதில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தேமுதிக வின் பட்டியல் தான். கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு தன் பலத்தை நிரூபித்தாலும், கேப்டன் அவர்களால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இம்முறை அதிமுக விடம் 60 தொகுதிகள் கேட்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தாலும் திமுக வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஜெயலலிதா அளித்த தொகுதிகளை பெற்றுக்கொண்டார். இறுதி நேரத்தில் அதிமுக செய்த குளறுபடியால் மக்கள் விரக்தியில் இருந்தாலும் கேப்டனை ஆதரிப்பதில் தெளிவாக உள்ளனர்.
இம்முறை நிச்சயம் தேமுதிக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படிப் பெற்று அதிமுக விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிமுக-தேமுதிக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பம். அப்படி அமைந்தால் மட்டுமே ஜெயலலிதா-வை கட்டுப்படுத்த முடியும் இல்லையென்றால் அவர் மதம் கொண்ட யானை ஆகிவிடுவார்.
கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் கேப்டன் மக்களுக்கு நிச்சயம் பல நன்மைகளை செய்வார். ஆக கேப்டன் படங்களை பார்த்து அவர் மேல் கோபம் கொண்டு யாரும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள், அது வேறு இது வேறு.
என்னடா பிரச்சாரம் மட்டும் பண்றான், வாக்குறுதி எதுவும் இல்லையானு கேக்காதீங்க ப்ளீஸ். இனிமே சொல்ல என்ன இருக்கு, எதாவது இலவசமா கொடுக்கரன்னு சொன்னா தா அது தேர்தல் அறிக்கைன்னு நம்மள பழக்கப்படுத்தி வச்சிருச்சு இந்த பெரிசு. விட்டா கல்யாணம் ஆகாத பசங்களுக்கு இலவசமா பொண்ணு தர்றேன்னு கூட சொல்லிடுவாரு.
எது எப்டியோ எங்க தொகுதில தேமுதிக போட்டி போடுது, அதனால ஒரு ஒட்டு இப்பவே உறுதி ஆயிடுச்சு. நீங்களும் தேமுதிக-அதிமுக கூட்டணிக்கே ஒட்டு போடணும்னு உங்கள வேண்டி விரும்பி கேட்டுக்கறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் இதையே சொல்லுங்க, எப்டியாவது தமிழ்நாட்ட காப்பாத்தணும்.
இவ்வளுக்கு பிறகும் நா என் ஜாதி கட்சி யாரு கூட கூட்டணி வச்சிருக்கோ அவனுக்கு தா ஒட்டு போடுவேன் இல்ல கலைஞர் இலவசமா மிக்சி கிரைண்டர் தர்றாரு அவருக்கு தா ஒட்டு போடுவான்னு நீங்க முடிவு பண்ணி வச்சிருந்தா, அப்புறம் இன்னும் 5 வருஷத்துக்கு நம்மள குனிய வச்சு குதிரை ஏறிடும் இந்த கலைஞர் குடும்பம். ஆகவே கொஞ்சம் யோசிங்க, கலைஞர் ரத்தக் காட்டேரிய விரட்ட ஜெயலலிதா பிசாசால மட்டும் தா முடியும். மூன்றாவது அணியெல்லாம் அடுத்த தேர்தல்ல கண்டிப்பா வரும் அப்பா இத ரெண்டையும் விரட்டிடலாம்.
அதற்கு இம்முறை கேப்டன் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் தான் முடியும். எனவே உங்கள் வாக்குகளை நமது "முரசு" சின்னத்திற்கே அளிக்கும்படி உங்களை இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
பழம் பெருச்சாளி ...
இவர்கள் இருவரை விட்டால் காங்கிரசுக்கு தமிழகத்தில் வேறு நாதி இல்லை. இருவரில் எவராவது ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டி உள்ளது.
இரண்டு வாரங்கள் கலைஞரை மிரட்டியும், காக்க வைத்து அசிங்கப்படுதியும் வந்த காங்கிரசை ஒரு முடிவால் தன்னிடம் கெஞ்ச வைத்து விட்டார் கலைஞர். அதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலக போவதாக அவர் எடுத்த முடிவு, இதனை தொடக்கம் என்றும் வைத்து கொள்ளலாம்.
தொடக்கத்தில் 80 தொகுதிகள் என்று உறுதியாக இருந்த காங்கிரஸ் இப்போது 50 கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விடும் போலும். இப்படி ஒரு நிலைமை வர என்ன காரணம்.
- கலைஞரின் "Timing Sense", அதிமுக-வும் தேமுதிக-வும் கூட்டணி அமைத்து விட்ட நிலையில் திமுக-வின் இந்த முடிவு காங்கிரசுக்கு மரண அடி. அம்மா-விடம் சென்றால் பிச்சைக்காரனை போல் நடத்துவார்.
- கலைஞரின் நம்பிக்கை, அப்படியே காங்கிரஸ் ரோஷம் வந்து தனித்து போட்டியிட்டாலும் எந்த தொகுதியிலும் டெபாசிட் திரும்ப வராது.
- கலைஞரின் திட்டம், அம்மா காங்கிரசை சேர்த்துக்கொண்டலும் சரி தேமுதிக-வுடன் மூன்றாவது அணி அமைத்தாலும் சரி தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை சுட்டிக்காட்ட கலைஞர் தயாராக உள்ளார்.
- கலைஞரின் சுயநலம், CBI கலைஞரின் வீட்டு வாசல் வரை வந்து விட்டது. எனவே கூட்டணியில் இருந்து விலகியதால் தான் காங்கிரஸ் தங்களை பழி வாங்குகிறது என்று தமிழக மக்களிடம் வந்து முறையிடுவார். இந்த வழக்கை உச்சநீதி மன்றம் கண்காணிக்கறது அதனால் காங்கிரசால் எதுவும் செய்ய முடியாது என்று கலைஞருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மக்களுக்கு நன்றாக தெரியும்.
வெற்றி யாருக்கு ?
ஆனால் இந்த தேர்தல் அதனை பொய் ஆக்கி விடும் என்று சில கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் திமுக அரசு செய்த சாதனைகள் தான் (spectrum ஊழல் அல்ல) என்று திமுக விசுவாசிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலிடும் சாதனைகளில் சில,
- இலவச தொலைகாட்சி
- இலவச மருத்துவக்காப்பீடு
- இலவ வீடு வழங்கும் திட்டம்
- 108 ஆம்புலன்ஸ்
- விவசாயக்கடன் தள்ளுபடி
- 1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி (கேரளாவிற்கும் சேர்த்து)
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
- கலிஞர் டிவி மானாட மயிலாட
- ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் (உபயம் : அழகிரி)
இன்னும் அடங்காதவை.
இறுதியில் வெற்றியை நிர்ணயிக்கப்போவது கூட்டணி மட்டுமே என்பது கலைஞரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆகவே இறுதி நேரத்தில் முடிந்த அளவிற்கு கட்சிகளை கூட்டணி ரயிலில் இழுத்துபோட்டுக் கொண்டிருக்கிறார்.
இம்முறை திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், தமிழகத்தில் 44 ஆண்டுகளாக இருந்த ஒற்றைக் கட்சி ஆட்சி முடிவுக்கு வரும். காங்கிரஸ் நிச்சயம் வெளியிலிருந்து ஆதரவு தர தயாராக இல்லை என்பது கலைஞருக்கு நம்மை விட நன்றாகவே தெரியும்.
அப்படி நடந்தால் தமிழரின் உரிமைகள் பறிக்கப்படும். காரணம், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் வந்துவிடும். ஏற்கனவே காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசலையே தடுக்க முடியாத தலைமை நிச்சயம் ஆட்சியில் சிறப்பாக செயல்படப்போவதில்லை. அப்படி ஒரு நிலைமை வந்தால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
காங்கிரஸ் கலைஞரிடம் தங்களுக்கு வேண்டிய 80 தொகுதிகளின் பட்டியலை கொடுத்துவிட்டது. ப. ம. க விற்கு 28, திருமாவிற்கு 15 போக திமுக விற்கு இறுதியாக கிடைக்கப்போவது 111 (அட இது நாமம் இல்லீங்க) மிச்சம் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை.
இது ஒரு புறம் இருக்க கேப்டனை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதுவும் நடந்துவிட்டால் திமுக-வை ஓரம் கட்டி விடும். அனால் நமது கேப்டனோ எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். காரணம், கடைசி நேரத்தில் அதிகம் பேரம் பேசலாம் என்று கணக்கு போடுகிறார் போலும்.
இரண்டாவது அணியில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளது. மதிமுக 25, CPI 12, CPM 13 என்று தெளிவாக பிரித்து கொடுக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 190 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். கேப்டன் இந்த அணியில் சேர்ந்தால் 50 தொகுதிகள் கட்டாயம் உண்டு.
திமுக மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம், திமுக வின் வாரிசு அரசியல், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலை போன்ற பல காரணங்கள் அதிமுக கூட்டணிக்கு சாதமாக உள்ளது. மேலும் சென்ற தேர்தல்களில் நடந்தது போல் கேப்டன் அதிமுக-வின் வாக்குக்களை பிரிப்பது மிகவும் கடினம். மக்களுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
எனவே கேப்டன் இல்லாவிட்டாலும் சரி இருந்தாலும் சரி அதிமுக கூட்டணி 150 முதல் 180 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கணிக்கலாம். அதில் அதிமுக மட்டும் 125 முதல் 155 இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் சாத்தியங்களே அதிகமாக உள்ளது.
யாராவது இருக்கீங்களா ?
நாம் இப்படி ஏமாளியாக இருக்க காரணம் என்ன, நம் செவிகள் தான். "பேசி பேசி ஆட்சியவே புடுச்ச பரம்பர நம்ம பரம்பர", என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் பொருந்தும். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பது நம் நாட்டு வழக்கம் தான். அப்படி அவர்கள் நம்மை என்ன சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
தமிழ் ! தமிழ் !! தமிழ் !!!
நினைவு தெரிந்த நாளில் இருந்து இதை சொல்லியே ஒரு தலைவர் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார். இவர் இப்படி சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. காரணம், இந்தி நம்மை ஊடுருவாமல் காத்த பெருமை இவருக்கும் சேரும். அதற்காக இவரை நல்லவர் என்றும் சொல்லி விட முடியாது.
தமிழக மக்களை இலவசங்களுக்கு அடிமை படுத்திய பெருமை இவருக்கே. இலவச வேட்டி சேலை, இலவச தொலைக்காட்சிப் பெட்டி என்று கொடுத்து நம்மை சோம்பேறி ஆக்கி விட்டார்.
[பி. கு. : எங்கள் வீட்டிலும் ஒன்று வாங்கி வைத்திருக்கிறோம், இலவசம் என்றால் யாருக்குத் தான் கசக்கும்]
இவருக்கு கட்சிதமாக பொருந்தும் மூன்று வார்த்தைகள் என்னவென்றால், "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி".
எம். ஜி. ஆர் ! எம். ஜி. ஆர் !! எம். ஜி. ஆர் !!!
இந்த அம்மையார் தமிழ் நாட்டின் இந்திரா காந்தி என்று சொன்னால் அது மிகை அல்ல. ஆட்சி நடத்தும் முறையில் இவர் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் இவரின் சர்வாதிகார போக்கு இவரை பின்னுக்குத் தள்ளி விட்டது.
இன்றும் எம். ஜி. ஆர் பேரை சொல்லியே ஒட்டு வாங்கி கொண்டு இருக்கும் இவருக்கு பொருத்தமான மூன்று வார்த்தைகள், "சசிகலா, கொடநாடு, டாஸ்மாக்".
மக்கள் ! மக்கள் !! மக்கள் !!!
அடுத்த எம். ஜி. ஆர் நான் தான் என்று சொல்லி அரசியலுக்கு வந்தவர், முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது (நான் கூட சென்றிருந்தேன் இவரை பாக்க மட்டும், கேக்க அல்ல). முதல் தேர்தலில் இவர் மட்டும் இவர் கட்சியிலிருந்து வெற்றி பெற்றார்.
மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவரின் எதிர்காலம் கேள்விக்குறியே. இவருக்கு மட்டுமே பொருத்தமான வார்த்தைகள், "சரக்கு, சரக்கு, சரக்கு".
ஆக நம்மை ஏமாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களை மீறி ஒருவர் ஆட்சிக்கு வருவது கடினம் தான் ஆனால் கண்டிப்பாக சாத்தியம். அப்படி யாராவது?
பாரதி !!!
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பமிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிறைஎனப்பின் மையும்
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவைநேரே இன்றெனக்குத் தருவாய்
என்றான் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும்மூளாதழிந்துடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் ...