நா எதுக்கு டா கிறிஸ்துமஸ் கொண்டாடனும் ???

இப்படி ஒரு தலைப்பை எழுத என்னை உத்வேகப்படுத்திய என் நண்பன் ஆனந்த் பாலகிருஷ்ணனுக்கு எனது நன்றிகள். 

தலைப்புக்குள் போகும் முன், என்னை பற்றி ஒரு அறிமுகம். நான் அமெரிக்காவில் மளிகைக்கடை முதலாளிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சேவை செய்பவன். என்ன ? புரியலையா ?

B4 jumping into the topic, lemme intro myself, am doing IT services to Retailers in US. இப்ப புரிஞ்சுருக்குமே லண்டன் துறைகளுக்கு ...

நான் இதில் கூறப்போகும் எந்த ஒரு கருத்தும் கிறிஸ்துவ சகோதரர்களை பற்றி அல்ல, இன்னும் சொல்லப்போனால் இதில் வரப்போவது கருத்தே அல்ல. அனைத்தும் என் கண் முன்னே நடக்கும் உண்மை. இவை அனைத்தும் நான் சார்ந்துள்ள துறையில் நடக்கும் அபத்தங்கள். 

முதலில், என் சந்தேகத்தை உங்கள் முன் வைத்து விடுகிறேன். நாங்கள் யாருக்கு வேலை செய்கிறோமோ அவர்களை Client, அதற்கு தமிழில் வாடிக்கைதாரர் என்று பொருள். அவனுக்கு நான் வேலை செய்கிறேன் அவன் எனக்கு பணம் தருகிறான்(அதுவும் முழுசா வந்து சேராது, அவன் குடுக்கறதுல 5% தா என் கைக்கு வந்து சேரும்). இப்படி இருக்கும் போது அவனுடைய பண்டிகையை நான் ஏன் கொண்டாட வேண்டும். 

நானும் ஒரு வாரமா பாக்கர இவனுங்க தொல்ல தாங்க முடியல, Secret Santa-ங்கறா, Merry Christmas-ங்கறா, என்னமோ பொறந்ததுல இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாடற மாதிரி ஒரு நெனப்பு. அட எனக்கு இது பிடிக்காதுங்கனு சொன்னா, நம்மல ஏதோ ஆதிவாசிய பாக்கற மாதிரி பாக்கறானுங்க. 

முதலாளியின் பண்டிகையை தொழிலாளி-யும் கொண்டாட  வேண்டும் என்றால், எனது தந்தையும் பல வருடங்களாக முதலளியகத்தான் இருக்கிறார். அவருடைய வேற்று மத தொழிலாளர் யாரும் எங்கள் பண்டிகையை கொண்டடி நான் பார்த்தது இல்லை. எங்களை விட மிகக்குறைவாக ஊதியம் வாங்கும் அந்த தொழிலாளியின் Communism கூட மெத்தப் படித்த இந்த Cyber முட்டாள்களுக்கு தெரியாமல் போனது நம் வெட்கக்கேடு. 

இன்று கிறிஸ்துமஸ்-ஐ விழுந்து விழுந்து கொண்டாடும் இவர்கள் அனைவரும், எனக்கு முக மூடி அணிந்து திரியும் கோமாளிகளை போலத்தான் தெரிகிறார்கள். Jingle Bell பாடத்தெரிந்தால் தான் நம்மை அறிவாளி என்று வெள்ளைக்காரன் சொல்ல போகிறானா. 

இவர்கள் இதை கொண்டாடுவதன் ஒரே நோக்கம், Client-ஐ குஷி படுத்த வேண்டும், அதாவது நாம் அவர்களை போலவே மாறி வருகிறோமம். அவன்  முதலாளியின் பண்டிகையை கொண்டாடும் இவன் எத்தனை முறை சொந்த  ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு போய் வருகிறான். அவனை பொறுத்த வரை எந்த ஒரு பண்டிகை  கொண்டாடினாலும் உன் சட்டையில் அழுக்கு படியாமல் இருக்க வேண்டும். கோயிலுக்கு போனால் கூட Split AC போட்ட Isckon Temple க்கு செல்பவன் அவன். 

நம் மண்ணின் அடையாளங்களை தொலைத்து, தன் சுய மரியாதையை இழந்து Modernization, Globalization and Westernization என்கிற மாயைக்குள் முதுகெலும்பில்லாமல் திரியும் இந்த வாழ்க்கையும் ஒரு கேடா.


No comments:

Post a Comment