வெற்றி யாருக்கு ?

ஒவ்வொரு தேர்தலிலும் இரு திராவிட கட்சிகளையும் மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்துவது நம் தமிழக மக்களின் வழக்கம். இதை வைத்துப் பார்க்கும் போது இம்முறை அதிமுக வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கடந்த கால தேர்தல்களை வைத்து எளிதாக கூறி விடலாம்.

ஆனால் இந்த தேர்தல் அதனை பொய் ஆக்கி விடும் என்று சில கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் திமுக அரசு செய்த சாதனைகள் தான் (spectrum ஊழல் அல்ல) என்று திமுக விசுவாசிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலிடும் சாதனைகளில் சில,
  • இலவச தொலைகாட்சி
  • இலவச மருத்துவக்காப்பீடு
  • இலவ வீடு வழங்கும் திட்டம்
  • 108 ஆம்புலன்ஸ்
  • விவசாயக்கடன் தள்ளுபடி
  • 1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி (கேரளாவிற்கும் சேர்த்து)
  • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
  • கலிஞர் டிவி மானாட மயிலாட
  • ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் (உபயம் : அழகிரி)

இன்னும் அடங்காதவை.

இறுதியில் வெற்றியை நிர்ணயிக்கப்போவது கூட்டணி மட்டுமே என்பது கலைஞரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆகவே இறுதி நேரத்தில் முடிந்த அளவிற்கு கட்சிகளை கூட்டணி ரயிலில் இழுத்துபோட்டுக் கொண்டிருக்கிறார்.

இம்முறை திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில், தமிழகத்தில் 44 ஆண்டுகளாக இருந்த ஒற்றைக் கட்சி ஆட்சி முடிவுக்கு வரும். காங்கிரஸ் நிச்சயம் வெளியிலிருந்து ஆதரவு தர தயாராக இல்லை என்பது கலைஞருக்கு நம்மை விட நன்றாகவே தெரியும்.

அப்படி நடந்தால் தமிழரின் உரிமைகள் பறிக்கப்படும். காரணம், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் வந்துவிடும். ஏற்கனவே காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசலையே தடுக்க முடியாத தலைமை நிச்சயம் ஆட்சியில் சிறப்பாக செயல்படப்போவதில்லை. அப்படி ஒரு நிலைமை வந்தால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

காங்கிரஸ் கலைஞரிடம் தங்களுக்கு வேண்டிய 80 தொகுதிகளின் பட்டியலை கொடுத்துவிட்டது. ப. ம. க விற்கு 28, திருமாவிற்கு 15 போக திமுக விற்கு இறுதியாக கிடைக்கப்போவது 111 (அட இது நாமம் இல்லீங்க) மிச்சம் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை.

இது ஒரு புறம் இருக்க கேப்டனை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதுவும் நடந்துவிட்டால் திமுக-வை ஓரம் கட்டி விடும். அனால் நமது கேப்டனோ எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். காரணம், கடைசி நேரத்தில் அதிகம் பேரம் பேசலாம் என்று கணக்கு போடுகிறார் போலும்.

இரண்டாவது அணியில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளது. மதிமுக 25, CPI 12, CPM 13 என்று தெளிவாக பிரித்து கொடுக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 190 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். கேப்டன் இந்த அணியில் சேர்ந்தால் 50 தொகுதிகள் கட்டாயம் உண்டு.

திமுக மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம், திமுக வின் வாரிசு அரசியல், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட மந்த நிலை போன்ற பல காரணங்கள் அதிமுக கூட்டணிக்கு சாதமாக உள்ளது. மேலும் சென்ற தேர்தல்களில் நடந்தது போல் கேப்டன் அதிமுக-வின் வாக்குக்களை பிரிப்பது மிகவும் கடினம். மக்களுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

எனவே கேப்டன் இல்லாவிட்டாலும் சரி இருந்தாலும் சரி அதிமுக கூட்டணி 150 முதல் 180 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கணிக்கலாம். அதில் அதிமுக மட்டும் 125 முதல் 155 இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் சாத்தியங்களே அதிகமாக உள்ளது.

1 comment:

  1. Military rule is safe dude , atleast the % of corruption will get reduce

    ReplyDelete